Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிமோனியா, ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு : பல நோய்களால் கஷ்டப்படும் சசிகலா!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (09:08 IST)
சசிகலாவுக்கு கடுமையான நிமோனியா காய்ச்சல் என பெங்களூரு மருத்துவமனை தகவல். 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.   
 
இதனிடையே திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை, சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பொள்ளாச்சி வழக்கில் திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை.. திருமாவளவன்

வேதியியல் தேர்வு.. ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100க்கு 100 மதிப்பெண்.. வினாத்தாள் லீக் ஆகியதா?

விஜய் - சீமான் கூட்டணியில் இணைகிறாரா ஓபிஎஸ்.. அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகள்..!

கர்ப்பிணி பெண்ணின் கண்ணீருக்கு பலன்! BSF வீரரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments