Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோலில் வெளிவர உள்ள சசிகலா?: சென்னைக்கு வரவும் வாய்ப்பு!

பரோலில் வெளிவர உள்ள சசிகலா டெல்லி செல்ல திட்டம்?: சென்னைக்கு வரவும் வாய்ப்பு!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2017 (19:59 IST)
இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என அதிமுகவின் இரண்டு அணிகளான சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இரு அணியினரையும் நேரில் ஆஜராகி விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.


 
 
ஆர்.கே.நகரில் வரும் 24-ஆம் தேதி வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்க உள்ளது தேர்தல் ஆணையம். இதனையொட்டி வரும் 22-ஆம் தேதி இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா அணிகள் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இதில் சசிகலா நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி சசிகலாவுக்கு சிறையில் பரோல் கேட்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
 
பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் சசிகலா டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை காட்டி சசிகலாவுக்கு பரோல் கேட்கப்பட்டால் அவருக்கு அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments