Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி: எல்லாம் போச்சா!

சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி: எல்லாம் போச்சா!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (17:04 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து மேல் முறையீடும் முடிந்துவிட்டதால் தற்போது சிறையில் உள்ள சசிகலாவால் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாத சூழலில் இருக்கிறார். எனவே அவருக்கும் ஒரே வாய்ப்பு சீராய்வு மனு ஒன்று தான்.
 
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சார்பில் மறுசீராய்வு மனு கடந்த மே 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கின் விசாரணை பல தடைகளை தாண்டி நேற்று வந்தது. இதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதனால் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. இணையதள முகவரி இதோ..!

பிரமாண்டமாக தயாராகிறது பனகல் பார்க் மெட்ரோ.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு?

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments