Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்சி ஒத்திகை பார்த்த சசிகலா புஷ்பா?

புதிய கட்சி ஒத்திகை பார்த்த சசிகலா புஷ்பா?

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (08:03 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுபினர் சசிகலா புஷ்பா, நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக விமானம் மூலமாக தமிழக வந்தார்.


 
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இவர் வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் படி இவரது எம்.பி. பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சசிகலா புஷ்பா மக்கள் அதிமுக என்ற புதிய கட்சியை துவங்கலாம் என்ற செய்தி முன்னதாக உலா வந்தது.
 
சசிகலா புஷ்பா சில பேட்டிகளில் தான் சார்ந்த சமூகத்தின் பெயரை சொல்லி பேட்டி கொடுத்தார். நாடார் சமூகத்தை சேர்ந்த சசிகலா புஷ்பா அந்த இன மக்களை குறிவைத்து கட்சி ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வருவதற்கு முன்னர் சசிகலா புஷ்பா கார்கள் புடை சூழ தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை காட்ட காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இது அவர் புதிய கட்சி தொடங்க அடித்தளம் என பேசப்படுகிறது.
 
மக்கள் அதிமுகவை தொடங்கி, தனக்கு நம்பிக்கையான ஒருவர் மூலம் நாடார் இனத்தை குறிவைத்து ஒரு அரசியல் கட்சியையும் தொடங்கி சில நாட்கள் கழித்து இரு கட்சியையும் ஒன்றாக சேர்ர்க்கும் பிளானில் சசிகலா புஷ்பா உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதற்கான ஒத்திகையே காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த நிக்ழ்வு எனவும், இதன் பின்னணியிலும் மணல் மனிதர் இருப்பதாக பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments