Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை விடுதலை செய்யுங்கள்: சசிகலா சீராய்வு மனு!

என்னை விடுதலை செய்யுங்கள்: சசிகலா சீராய்வு மனு!

Webdunia
வியாழன், 4 மே 2017 (09:09 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உச்ச நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்யவேண்டும் என சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


 
 
ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீடு மனுவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கியது. இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
 
500 பக்கத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழக்கினர் நீதிபதிகள். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் சிறையில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் எந்த விசேஷ சலுகையும் காட்டகூடாது என கண்டிப்புடன் கூறியது.
 
மேலும் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு ஜாமீன் வாய்போ, மறுசீராய்வு வாய்ப்போ இருக்காது என இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான பி.வி.ஆச்சார்யா தெரிவித்திருந்தார். மேலும் இவர்களுக்கு சிறையில் எந்தவித சலுகையும் அளிக்கப்பட கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 
ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா சார்பில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை குறைக்க மறுசீராய்வு மனுவும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்தது போன்று தங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments