Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்ப்பின் நகல் கையில் கிடைக்கல. நான் போக மாட்டேன் - சசிகலா அடம்?

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (17:51 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நகல் இன்னும் சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது..


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். இன்று மாலைக்குள் அவர்கள் கர்நடக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது...  
 
இந்நிலையில், சசிகலா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அவசரமாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் “தீர்ப்பை ஏற்றுக்  கொள்கிறேன். நான் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருப்பதால் சில கட்சிப் பணிகளை முடிக்க வேண்டியிருக்கிறது. மேலும், எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், சில மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மாலைக்குள்ளே விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகலை தற்போது வரை சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தீர்ப்பின் நகல் கையில் கிடைக்கட்டும் அதன் பின் பார்க்கலாம். அதுவரை பெங்களூருக்கு செல்ல முடியாது என சசிகலா தரப்பு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது..
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments