Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக இப்படி நடந்து கொள்ளும் என சசிகலா அப்பவே சொன்னாங்க! - அதிமுக எம்.எல்.ஏ. பளார்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (08:11 IST)
சட்டசபையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்றும் ஆனால், பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்றும் சசிகலா சொன்னதாக சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


 

சாத்தூர் தொகுதி, கீழராஜகுலராமன் கிராமத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “சட்டசபையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சசிகலா சொன்னார்.

அவருடைய பேச்சைக் கேட்டு, சட்டசபையில் மூணு மணி நேரம் கை கட்டி, வாய் பொத்தி, அமைதியா இருந்தோம். ஸ்டாலினும், துரைமுருகனும் தூண்டிவிட்டு திமுக எம்எலஏக்கள் வன்முறையில் ஈடுபட்டாங்க. அப்பொழுது நாங்கள் அமைதி காத்ததனால், தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றி விட்டோம்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments