Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியின் துயரத்தில் அதிமுக தொண்டர்கள்: சசிகலா சொல்வது என்ன?

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (14:47 IST)
தொடர் தோல்விகளை சந்திப்பதால் அதிமுக தொண்டர்கள் துயரத்தில் உள்ளனர் என சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி. 

 
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வந்தனர். 
 
உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். 
 
இந்நிலையில் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, தொடர் தோல்விகளை சந்திப்பதால் அதிமுக தொண்டர்கள் துயரத்தில் உள்ளனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம். நான் அனைவரையும் ஒரே குடும்பத்துப் பிள்ளைகளாக பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில் சாதாரண ரயிலாக மாற்றம்: என்ன காரணம்?

நேரு மாடல் தோல்வியடைந்து விட்டது. சீர்திருத்த முயற்சிகள் செய்கிறோம்: அமைச்சர் ஜெய்சங்கர்

என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றங்களுக்கும், சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம்: மணிசங்கர் அய்யர்..!

த.வெ.க.வில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜூனா

பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவு: கனிமொழி எம்பி, கமல்ஹாசன் இரங்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments