Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தவிர எல்லா கட்சியும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்: சரத்குமார்

Siva
திங்கள், 4 மார்ச் 2024 (07:09 IST)
திமுக தவிர மற்ற இரண்டு கூட்டணியிலும்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

 திமுக, அதிமுக மற்றும் பாஜக என மூன்று கூட்டணிகள் இந்த முறை தேர்தலில் மோதும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சின்ன சின்ன காட்சிகள் இந்த மூன்று கூட்டணிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  சமீபத்தில் அளித்த பேட்டியில் திமுக தவிர அதிமுக மற்றும் பாஜக கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் விரைவில் கூட்டணி குறித்த முடிவை தெரிவிப்போம் என்றும் கூறினார்.

தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் வேட்பாளர் பட்டியல் எல்லாம் தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி அனேகமாக பாஜக கூட்டணியில் தான் இணையும் என்றும் அந்த கூட்டணியில் அக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments