Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (08:29 IST)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய தமிழக காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட கூட்டத்தில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்ட போதிலும் அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன்  மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும் எஸ்.வி.சேகர் இன்று வரை கைது செய்யப்படவில்லை
 
இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணையை பொறுத்தே எஸ்.வி.சேகரை கைது செய்வது குறித்து தமிழக போலீசார் முடிவெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எவ்வளவு பணம் எண்ண முடிகிறதோ, அவ்வளவும் போனஸ்.. சீன நிறுவனத்தின் வித்தியாசமான அறிவிப்பு..!

சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. எந்த இணையதளத்தில்?

வீட்டிற்குள் செல்ல பாதையில்லை.. ஹெலிகாப்டர் வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயி..!

ஆதவ் அர்ஜுனாவிற்கு மாநில பொறுப்பு.. தவெக தலைவர் விஜய் முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments