Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவல் உரிமை ஆர்வலர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை : சென்னையில் பயங்கரம்

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (10:42 IST)
சென்னை சூளையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கீழ்பாக்கம் பூந்தமல்லி சாலைப் பகுதியில் வசித்து வந்தவர் ஜா.பாரஸ்மால்(59). இவர் சௌகார்பேட்டை நாராயண முதலித் தெருவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் இவர் ஒரு தகவல் உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டார்.
 
வடசென்னை பகுதியில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் பற்றி தகவல்களை தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்று,  சென்னை மாநகராட்சிக்கு அளித்து வந்தார். மேலும். விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வந்தார்.
 
அவரது புகாரின் பேரில் எராளாமான கட்டிடங்களுக்கு சென்னை மாநகரம் சீல் வைத்தது. இதனால் அவருக்கு நிறைய எதிரிகள் உருவாகினர். அவர்களை இவரை பலமுறை பயமுறுத்தியும், எச்சரித்தும் பாரஸ்மால் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தவில்லை.
 
இந்நிலையில், அவர் தனது மோட்டார் சைக்கிளில் சூளை ரொட்டி கிடங்கு சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்த போது, ஆட்டோவிலும், மோட்டார் சைக்கிளிலும் வந்த கும்பல், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.
 
இதில் பலத்த காயமடைந்த பாரஸ்மால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பெரியமேடு போலீசார், கொலையாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 
 
அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் கூலிப்படையினரால் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். தற்போது தகவல் உரிமை ஆர்வலர் நேற்று காலை கொலை செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழக்தில், கூலி படையினர் பலர் வெட்டி கொலை செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு மாவட்ட செயலாளர் விலகல்.. என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சர் தகவல்..!

சென்னையில் 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றமா? என்ன காரணம்?

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு செம மழை! - வானிலை அலெர்ட்!

ஸ்டாலின் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டு வராதது ஏன்? சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments