Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோட்டா கடை தகராறு; பாஜக பிரமுகரை சுட்ட முன்னாள் ராணுவ வீரர்!

Tamilnadu
Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (09:17 IST)
திருநெல்வேலியில் புரோட்டா கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணூவ வீரர் ஒருவர் பாஜக பிரமுகரை சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பெரியதுரை. அப்பகுதியில் புரோட்டா கடை நடத்தி வரும் இவர் மாவட்ட பாஜக இளைஞரணி பொது செயலாளராகவும் உள்ளார். இவரது புரோட்டா கடைக்கு அருகே வசித்து வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெபமணி என்பவருக்கும், பெரியதுரைக்கும் புரோட்டா கழிவுகளை கொட்டுவது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலையும் புரோட்டா கழிவுகளை வீட்டின் அருகே கொட்டியதாக ஜெபமணி, பெரியதுரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் சண்டை முற்றவே ஆத்திரமடைந்த ஜெபமணி தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை கொண்டு வந்து பெரியதுரையை சுட்டுள்ளார். இதனால் பெரியதுரைக்கு தோள்பட்டையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஜெபமணியை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments