Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:06 IST)
சென்னையில் இன்று காலை 1.3 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பெண் ஐடி ஊழியர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில் 35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கம்போடியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமான மூலம் போதை பொருள் கடத்திவரப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் சென்னை வந்த இளைஞரிடம் சோதனை செய்த போது அவரிடம் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது 
 
கம்போடியாவில இருந்து அந்த போதைப் பொருளை சென்னைக்கு கடத்தி வந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது அடுத்து இளைஞரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போதை பொருளை யாரிடமிருந்து கொண்டு வந்தார்? யாருக்கு அந்த இளைஞர் கொண்டு செல்கிறார்? என்பது போன்ற விவரங்கள் விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
சென்னை விமான நிலையத்தில் 35 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றிய தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போதை பொருளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது. 
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments