Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’காதல் மனைவியை’ கடத்திய கொடூர கணவன் ...பதறவைக்கும் சம்பவம்!

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (14:53 IST)
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கிளாவடிநத்தம் என்ற கிராமத்தில் வசித்துவருபவர் கலியவரதன். இவரது மகள் கோப்பெர்ந்தேவி (24). இவர் வடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மருத்துவராக பணியாற்றிவந்தார். அப்போது வடலூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (26) என்பவருக்கும் இடையே காதல் அரும்பியுள்ளது. 
ஆனால் இவர்களின் இருவீட்டாரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு காட்டினர். இதனால் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டு வாழ்கை நடத்தினர்.
 
சிறுதுகாலம் மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த இவர்கள் குடும்ப் வாழ்வில் பணம் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகுமாருக்குத்தான் அதிகமாக பணம் தேவைப்பட்டுள்ளது.
 
இதனால் அடிக்கடி தனது மனைவி கோப்பெருந்தேவியிடம் நகை, பணம், கேட்டு நச்சரித்துள்ளார். சில நேரங்களில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்படி ஒருநாள் இருவருக்கும் பிரச்சனை ஏற்படவே கோப்பெருந்தேவி தன் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றதாலும், கையில் பணம் இல்லாததாலும் கடும் கோபம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர்கள் 6 பேருடன் திட்டம் போட்டு தன் மனைவியைக் கத்திமுனையில் கடத்தினார்.
 
அத்துடன் மனைவியின் தாய், தங்கை சாரதாதேவி ஆகியோரை தாக்கிவிட்டு காதல் மனைவியைக் காரில் கடத்திச் சென்றனர்.
 
பின்னர், கோப்பெருந்தேவியின் வீட்டார் கொடுத்த புகாரின்  அடிப்படையில்  புவனகிரி போலிஸார் வழக்குபதிவுசெய்து  கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 7 பேரை வலை வீசித்தேடி வருகின்றனர்.
 
காதலித்து மணம்முடித்த கணவனே மனைவியை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments