நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:18 IST)
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்கள் சமீபத்தில் நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்தது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்களுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்கள் தற்போது குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments