Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

Siva
திங்கள், 23 டிசம்பர் 2024 (07:09 IST)
2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப்  பரப்பப்படுகிறது. 
 
இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது. 
 
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 
 
2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. 
 
வதந்தியைப் பரப்பாதீர்!
 
 
Editd by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments