Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவிலக்கு நேரம் குறைப்பு - பாமகவுக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்

மதுவிலக்கு நேரம் குறைப்பு - பாமகவுக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (10:49 IST)
தமிழகத்தில், மதுவிலக்கு நேரம் குறைப்பு பாமகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதா 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
 
முக்கியமாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படும்; 500 சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்பதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார். இதுதொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
 
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து 26 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்வைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.
 
மதுவிலக்கை வலியுறுத்துவதே பாவச்செயல் என்று பேசப்பட்ட நிலையிலிருந்து, தமிழகத்தை மது வெள்ளம் பாயும் மாநிலமாக மாற்றிய அதிமுகவும், திமுகவும் மதுவிலக்கு குறித்து தேர்தல் வாக்குறுதி அளிக்குமளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு முழு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த வகையில் தமிழகத்தில் மது விற்பனை நேரமும், மதுக்கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருப்பது பாமகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல என தெரிவித்துள்ளார்.
 
   
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments