Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

Siva
புதன், 15 மே 2024 (19:32 IST)
பெண் காவல்துறையினர் குறித்து சவுக்கு சங்கர் சர்ச்சுக்குரிய வகையில் பேட்டி அளித்த போது அந்த பேட்டியை ஒளிபரப்புய ரெட்பிக்ஸ் நிறுவனமும் தற்போது வழக்கில் சிக்கி உள்ளது. இந்த நிலையில் ரெட்பிக்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இது குறித்து மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX-க்கு உடன்பாடு இல்லை, அது RED PIX-ன் கருத்தும் இல்லை. இருப்பினும் அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்துருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
 
கடந்த 30-04-2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது RED PIX ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர RED PIX ஊடகத்தின் கருத்து அல்ல. 
 
பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக RED PIX ஊடகம் கருதுகிறது. சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக RED PIX ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. 
 
சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் PRIVATE செய்யப்பட்டுள்ளது.
 
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments