Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் மகள் சௌந்தர்யா விவாகரத்துக்கு இதுதான் காரணம்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:00 IST)
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து செய்திதான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. 


 

 
2010-இல் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், 6 வருடம் கழித்து திடீரெனெ தற்போது அவர் கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது. 
 
சில நாட்களுக்கு முன்பு, நடிகை ராதிகா, தனது மகளின் திருமண வரவேற்பு விழாவில், விருந்தினர்களுக்கு மது விருந்து அளிக்கப்பட்டதாகவும், அதில் சௌந்தர்யா கலந்து கொண்ட போது ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.
 
ஒருபுறம், பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற சௌந்தர்யா, மீண்டும் கணவன் வீட்டிற்கு திரும்பவில்லை. எனவே, கணவன் மனைவிக்குள் ஏதோ புரிதல் இல்லை என்று கூறப்பட்டது. 
 
தற்போது அதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
 
சௌந்தர்யாவும், அஸ்வினும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், அதன்பின் அவர்களுக்குள் பெரிய ஈடுபாடு இல்லாமல் போய்விட்டதாம்.

திருமணம் செய்து 6 வருடங்கள் ஆகியும் அவர்களுக்குள் பல விஷயங்கள் ஒத்துபோகவில்லையாம். ரஜினி குடும்பத்தினரோடு அஸ்வினுக்கு ஏனோ செட் ஆக வில்லை என்றும், நிறைய விஷயங்களில் அவரும், சௌந்தர்யாவும் அட்ஜஸ்ட் செய்துதான் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
 
கடந்த ஒரு வருடமாக ஒருவரை ஒருவர் முகம் பார்த்து கூட பேசிக் கொள்வதில்லை. எனவே இதற்கு மேல் ஒன்றாக வாழ்வது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு இருவருமே வந்துவிட்டதால், சௌந்தர்யாவின் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள்...

ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் காதல் கதை


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிரியாவில் திடீரென தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 37 பயங்கரவாதிகள் பலி..!

திடீரென மயங்கி விழுந்த கார்கே.. தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி..!

இன்று காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அரசியல் என்பது குடும்பங்களை மையமாக கொண்டு இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்..!

அருணாச்சல பிரதேசத்தில் யாரும் செல்லாத மலைச்சிகரம்: தலாய் லாமா பெயர் வைக்க சீனா எதிர்ப்பு..

அடுத்த கட்டுரையில்