Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ரியல் எஸ்டேட் அதிபர் கைது!

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2020 (10:44 IST)
சென்னையில் 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக நகர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரது வீட்டில் தினசரி வேலைகளை மூதாட்டி ஒருவர் செய்து வந்துள்ளார். மூதாட்டிக்கு 15 வயதில் பேத்தி ஒருவர் உள்ளார். 10ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விடுமுறை நாட்களில் பாட்டிக்கு உதவியாக பால்ராஜ் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பால்ராஜ் அந்த சிறுமிக்கு கடந்த ஒரு வருட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பால்ராஜின் பாலியல் தொல்லைகளை பொறுக்க மாட்டாமல் தனது பாட்டியிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார் அந்த சிறுமி. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் பால்ராஜை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்