அதிகரித்த ரேஷன் கார்ட் விண்ணப்பங்கள் ... முடங்கியது இணையதளம்

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (11:01 IST)
ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதால் பொது விநியோக திட்ட இணையதளம் கடந்த சில நாள்களாக முடக்கியிருக்கிறது. 

 
நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்தது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இப்போது இந்த புதிய திட்ட அறிவிப்பால் புதிதாக ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒன்றாக இருந்த கார்ட்களையும் பிரித்து தனித்தனி கார்ட்களாக பிரிக்கும் விண்ணப்பங்களும் அதிகமாகியுள்ளதாம்.
 
இதனால்  பொது விநியோக திட்ட இணையதளம் மிகவும் பிஸியாக இருந்தது. இந்நிலையில் பொது விநியோக திட்ட இணையதளம் கடந்த சில நாள்களாக முடக்கியிருக்கிறது. அதில் எந்தவொரு சேவையையும் பெற முடியாத சூழல் நிலவுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

90 சீட்.. முதலமைச்சர் வேட்பாளர்!.. என்.டி.ஏ கூட்டணிக்கு டிமாண்ட் வைக்கும் தவெக!..

ஒரு மாதத்தில் 63 கோடிக்கு இறால் சாப்பிட்ட அமெரிக்க அதிகாரிகள்..

எனக்கு மட்டும் ஏன் சிபிஐ சம்மன்?. எல்லாருக்கும் அனுப்புங்க!.. பொங்கிய செந்தில் பாலாஜி..

விஜயின் எஸ்கேப் ரகசியம் என்ன!.. நடிகை வினோதினி கோபம்!..

என் காலை போலீசார் உடைத்தனர்!.. அதிர்ச்சியை கொடுத்த ஆகாஷின் மரண வாக்குமூலம்..

அடுத்த கட்டுரையில்
Show comments