Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேபிட் கிட் டுபாக்கூர்: அன்றே சொன்ன டாக்டர் வேலுமணி

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (18:00 IST)
ரேபிட் கிட் டுபாக்கூர்: அன்றே சொன்ன டாக்டர் வேலுமணி
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு ரேபிட் கிட் சரியான கருவி இல்லை என்றும் அது சரியான முடிவைத் தர வாய்ப்பு இல்லை என்றும் டாக்டர் வேலுமணி கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்துள்ளது இன்று உண்மையாகியுள்ளது 
 
ரேபிட் கிட் கருவி கொரோனா பரிசோதனைக்கு ஏற்ற கருவி அல்ல என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கருவியை  அடுத்த இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. ராஜஸ்தானில் இந்த கருவியால் செய்யப்பட்ட பரிசோதனைகள் தவறான முடிவை காட்டுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது 
இந்த நிலையில் டாக்டர் வேலுமணி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் ரேபிட் கிட் கருவி சரியான முடிவைத் தராது என்றும் அதில் நம்பகத்தன்மை இல்லை என்றும் அதன் விலை எல்லாமே குழப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்
 
சீனாவிலிருந்து ஏற்கனவே இங்கிலாந்து நாடு 20 மில்லியன் டாலர் செலவு ரேபிட் கிட் கருவியை வாங்கி உள்ளது என்றும் ஆனால் சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை என்பதால் இங்கிலாந்து நாடு புலம்பிக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் 
 
உண்மையின் கொரோனா பரிசோதனைக்கு மூன்று விதமான கருவிகள் உள்ளது என்றும், ரேபிட் கிட் கருவி, எலிசா கருவி, மற்றும் கிளியா அருவி ஆகியவை என்றும் இந்த மூன்றில் ரேபிட் கிட் உலகம் முழுவதும் தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எலீசா மற்றும் கிளியா கருவிகள் ஓரளவு நம்பகத் தன்மையானது என்றும் இது மே மாதம் தான் நமக்கு கிடைக்கும் என்றும் டாக்டர் வேலுமணி தெரிவித்துள்ளார்
 
எலிசா மற்றும் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டால் ரிசல்ட் கிடைக்க 24 மணி நேரம் ஆகும் என்றாலும் அவை அவற்றின் முடிவு 100% நம்பகத் தன்மையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரேபிட் கிட் கருவி போலியானது என்று அன்றே தெரிவித்த டாக்டர் வேலுமணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments