Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டரை விட்டு ஓடிய பீட்டா அமைப்பின் செயல் அதிகாரி பூர்வா

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (15:19 IST)
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில்  இருந்து காளையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழர்களால் நடத்தவே முடியாது என்று பீட்டா அமைப்பின் செயல் அதிகாரி(சி.இ.ஓ) பூர்வா  ஜோஷிபுரா சவால் விடுத்திருந்தார்.
 
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்,  ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பூர்வாவை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டனர்.  மேலும் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதனையடுத்து அவர் ட்விட்டர்,  ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.
 
ஏற்கனவே தன்னை பலரும் கடுமையாக விமர்சித்ததை அடுத்து த்ரிஷா ட்விட்டரில் இருந்து வெளியேறினார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் இருப்பதாக பரவிய தகவலை அடுத்து அவரும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.  ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவரும் ட்விட்டரை விட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்கள்: ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது குழந்தை பரிதாப பலி.. மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம்..!

உங்களை கண்காணித்து வருகிறோம்: நடிகர், நடிகைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்..

சுபாஷ் சந்திரபோஸ் சாகவில்லை.. முதன்முதலில் சொன்ன முத்துராமலிங்க தேவர்! - போஸ்-தேவர் நட்பு!

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் 4 கிமீ நீட்டிக்கப்படுகிறதா? பொதுமக்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments