Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் தங்கையின் அதிர வைக்கும் பேட்டி

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (11:17 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை கைது செய்து காவல் துறை விசாரித்து வருகின்றனர். மேலும் ராம்குமாரின் தங்கை, அம்மா உள்ளிட்ட அவரது வீட்டினரையும் காவல் துறை விசாரணைக்காக கைது செய்தனர்.


 
 
இந்நிலையில் அவரின் தங்கை மதுபாலா தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி அதிர வைத்துள்ளது.
 
அப்போது அவர் பேசியது, ராம்குமாரை கைது செய்ய காவல் துறையினர் இரவு 11 மணிக்கு வந்தனர். ஆனால் ராம்குமார் தான் குற்றவாளி என உறுதிபடுத்தும் முன்னரே பெண்கள் என்று கூட பார்க்காமல் எங்களை விரட்டி விரட்டி போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.
 
எப்படி அவர்கள் எங்களை போட்டோ எடுக்கலாம், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வேறு மாதிரியான முடிவு எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.
 
மேலும், ராம்குமார் பற்றி கூறும்போது, அண்ணன் இந்த கொலையை செய்திருப்பார் என்று எங்களால் நம்ப முடியவில்லை. படிப்பு விஷயத்தில் நிறைய உதவி செய்யும் ராம்குமார் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார்.
 
இந்த வழக்கை திசை திருப்பவே என் அண்ணன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments