Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரின் காதல் லீலைகள்: பரபரப்பு தகவல்கள்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (13:46 IST)
சுவாதி, ராம்குமார் இந்த இரு பெயர்களும் தற்போது ஊடகங்களில் வலம் வரும் முக்கியமான பெயராகவிட்டது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரை நெல்லையை சேர்ந்த ராம்குமார் தான் கொலை செய்தார் என காவல் துறையினர் கைது செய்தனர்.


 
 
இதனையடுத்து ராம்குமார் குறித்து தினம் தினம் பல தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. ராம்குமார் அமைதியான பையன், யாரிடமும் அதிகமாக பேசமாட்டான், பெரிய அளவில் நண்பர்கள் வட்டாரம் கிடையாது, ராம்குமாரா கொலையை செய்தான் என நம்ப முடியவில்லை என்ற ஊர்காரர்களின் கருத்து என பல செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.
 
இந்நிலையில் ராம்குமார் ஏற்கனவே 2 பெண்களை காதலித்ததாகவும் பேசப்படுகிறது. இது குறித்து அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது ராம்குமாரின் முன்னாள் காதல் விவகாரங்கள் குறித்து தெரியவந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
ராம்குமார் கல்லூரியில் படிக்கும் போது கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும், இதனால் கல்லூரி நிர்வாகம் அவரை எச்சரித்ததாக கூறப்பட்டது. இதனால் தான் அவர் படிப்பில் கோட்டைவிட்டதாக பேசப்படுகிறது.
 
மேலும் சில வருடங்களுக்கு முன்னர் ஊரில் ஒரு பெண்ணுக்கும் ராம்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்து வரை சென்றது என கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?

பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு மெஜாரிட்டி: கருத்துக்கணிப்பு..!

கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ரூ.150 கோடி மதிப்பில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம்.. 4 ஏக்கர்.. 3 கோபுரங்கள்.. 12 மாடிகள்..!

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments