Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர்களின் ஈகோ யுத்தம்.. ஜெயிக்க வேண்டிய ராமநாதபுரத்தை இழக்கும் திமுக..

Siva
புதன், 10 ஏப்ரல் 2024 (15:23 IST)
உள்ளூர் திமுக தலைவர்களை ஈகோ யுத்தம் காரணமாக ஜெயிக்க வேண்டிய ராமநாதபுரம் தொகுதி திமுக கையை விட்டு போய்விடும் நிலையில் இருப்பதாக திமுக தொண்டர்கள் அதிர்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ராஜ கண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி ஆகிய இருவர் பங்கேற்ற கூட்டத்தில் இருவருக்கும் இடையே திடீர் பிரச்சனை ஏற்பட்டது என்பதும் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டிக் கொண்டதை ராஜ கண்ணப்பன் இன்னும் மறக்கவில்லை என்றும் அதனால் தான் நவாஸ் கனிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்ய தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இன்னும் ஒரு தொகுதியில் கூட முழுமையாக பிரச்சாரத்தை முடிக்கவில்லை என்றும் சமீபத்தில் ராமநாதபுரம் வந்த முக ஸ்டாலின் தேர்தல் வேலையை சுறுசுறுப்பாக செய்யுங்கள் என்று சொல்லியும் ஈகோ காரணமாக ராஜ கண்ணப்பன் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் அவர் தனது மகனுக்கு சீட்டு கேட்டு கொடுக்கவில்லை என்ற வருத்தம் இருப்பதாக கூறப்படும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கூட தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்ட வில்லை என்று கூறப்படுகிறது

மிக எளிதாக வெற்றி பெறக்கூடிய ராமநாதபுரம் தொகுதியில் தலைவர்களின் ஈகோ காரணமாக தோல்வியை தழுவும் நிலை இருப்பதாக திமுக தொண்டர்களே பரிதாபத்துடன் கூறி வருகின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments