Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோவுடன் ராமதாஸ் சந்திப்பு

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (14:03 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சோ.ராமசாமியை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர்  சோ.ராமசாமி உடல் நலக் குறைவுக் காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இவரது உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சோ.ராமசாமியை முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு  நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்து  நலம் விசாரித்தார். மேலும் சோ.ராமசாமியின் மனைவியிடம்  மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் ,உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார். விரைவில் நலம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments