Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை: ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்து!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (14:09 IST)
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள்.
 
ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30நாட்களும்  நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள்.
 
ரமலான் 30நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர். இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர்.
 
பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். தொழுகைக்கு செல்வதற்கு  முன்பாக ஏதாவது ஒரு ஏழைக்கு உதவி செய்ய்வேண்டும் அடிப்படையில் பத்து என்னும் உதவியை வழங்கிவிட்டு தொழுகையில் ஈடுபடுவர்.
 
அதனடிப்படையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகையில் நடைபெற்றது. திடல் பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில்  பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என ஐந்தாயிரம் திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
இதேபோல் தமுக்கம், திருமங்கலம், மேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள திடல்களில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் சிறப்பு  தொழுகையில் ஈடுபட்டனர்.
 
இதில் பெரும்திரளான குழந்தைகள் , பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு இஸ்லாமிய பெருமக்களும் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். பெருநாள் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கைகொடுத்தும், ஆரத்தழுவியும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

அடுத்த கட்டுரையில்
Show comments