கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங்! - மகிழ்ச்சியில் திமுகவினர்!

Prasanth Karthick
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (19:46 IST)

இன்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார்.

 

 

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி அச்சடிக்கப்பட்ட புதிய 100 ரூபாய் நாணயம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார். சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், பின்னர் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். அதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments