Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் கட்சியை இன்று பதிவு செய்கிறாரா ரஜினிகாந்த்?

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (07:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்த நிலையில் அவருடைய கட்சி பணிகளை அர்ஜுனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோர் கவனித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ரஜினி கட்சியினர் இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒரு சில முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மேலும் கட்சியின் பெயரும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் மொத்தம் ஐந்து பெயர்களில் ஒன்றை ரஜினி தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் ரஜினியின் வழக்கறிஞர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் கட்சியைப் பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் கட்சிக் கொடியின் தயாராகி விட்டதாகவும் வெள்ளை நிறத்தில் நடுவில் வட்டமாக இடத்தில் ரஜினியின் புகைப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கட்சி பெயர் அறிவித்தவுடன் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் வார்டுகளிலும், அனைத்து தெருக்களிலும் கட்சி கொடியை நிறுவ ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments