ரஜினி மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? இன்னும் சில மணி நேரத்தில் உத்தரவு

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (09:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த துக்ளக் 150 வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை அடுத்து திராவிடர் விடுதலை கழகத்தினர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ரஜினி மீது புகார் அளித்தனர். புகார் அளித்த ஒரு சில நாட்களிலேயே அந்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதுகுறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து பேசியதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றும் ரஜினி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் ரஜினிகாந்த் பேசியது உண்மைக்கு புறம்பானது என்றும் எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலை கழக வழக்கறிஞர் வாதாடினார்
 
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்த உத்தரவை இன்று பிறப்பிக்கவுள்ளார். இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments