Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 நாள் சிறைவாசத்திற்கு பின் ஜாமீன் கேட்கும் வைகோ...

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (13:55 IST)
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதிமுக தலைவர் வைகோ, தனக்கு ஜாமீன் அளிக்கும்படி சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.


 

 
2009ம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கு பல வருடங்களாக கிடப்பில் இருந்தது. அந்நிலையில், வைகோ கடந்த ஏப்ரல் 3ம் தேதி திமன்றத்தில் தானாக சரணைடந்து வழக்கை சந்தித்தார். எனவே, அவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.  
 
மேலும், ஏப்ரல் 17ம் தேதி 15 நாட்கள் காவல் முடிந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும், தான் ஜாமீனில் செல்ல விருப்பமில்லை என வைகோ கூறியதையடுத்து, அவரின் நீதிமன்ற காவல் ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வைகோ சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 50 நாட்கள் அவர் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments