Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 12ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்?

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (17:26 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த மாதம் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது பற்றி சூசமாக தெரிவித்தார். அதிலிருந்து அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதே ஊடகங்களின் விவாத பொருளாக மாறிவிட்டது. 
 
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் எனவும், ஜூலை மாதம் அவர் முக்கிய அறிவிப்பார் எனவும் அவரின் சகோதரர் சத்யநாரயணாவும் கூறியிருந்தார். தற்போது ரஜினி ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார். 
 
மேலும், முன்பு போல் இல்லாமல், இந்த முறை அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என அவரின் நெருங்கிய வட்டாரங்களும் கூறி வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அரசியலுக்கு வருவது பற்றி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், தன்னுடைய நலம் விரும்பிகள், நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரிடம் அவர் ஆலோசனை செய்து வருகிறார். 
 
இந்நிலையில், அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி, அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என செய்திகள் வெளிவந்துள்ளது. அவரது ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments