Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவகவுடா இருக்கிறார் ; காலா கர்நாடகாவில் வெளியாகும் : ரஜினிகாந்த் பேட்டி

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (10:54 IST)
கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
கர்நாடக மாநிலத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ள நிலையில் அந்த மாநிலத்தில் 'காலா' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், 'காலா' படத்தை வெளியிடுவது குறித்த பிரச்சனையில் அரசு தலையிடாது என்றும் கன்னட மக்கள் 'காலா' படம் திரையிடுவதை விரும்பவில்லை என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறிவிட்டார்.
 
கர்நாடகாவில் காலா" படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினிகாந்த் “ காலா திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகும். இப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட எதிர்ப்பு குறைவாகவே இருக்கிறது. காலா ரிலீஸ் செய்வதில் ஐயா தேவகவுடா  உதவியாக இருப்பார் என நம்புகிறேன். சினிமா வேறு. அரசியல் வேறு. இது பலருக்கும் புரியவில்லை”என அவர் பேட்டியளித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments