Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள்

ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள்

கே.என்.வடிவேல்
வியாழன், 23 ஜூன் 2016 (12:32 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விவசாயிகள் கெடுவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி காவிரி நதிநீர் பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. அப்போது, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடிகர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
 
பின்பு, கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார். ஆனால், அவர் கூறி, 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை ரஜினி அந்த நிதியைத் தரவில்லை.
 
எனவே, அடுத்த ஒரு மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாயை ரஜினி தரவேண்டும். இல்லை எனில், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ரஜினி நடித்த காபலி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், விவசாயிகள் போரட்டம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments