Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டனா சட்ட கிழியத்தான் செய்யும்: வடிவேலு பஞ்சை மாற்றி அடித்த அமைச்சர்!!

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (14:52 IST)
பிரச்னை ஏற்பட்டால் பாதிப்பு வரத்தான் செய்யும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொரோனா குறித்து பேசியுள்ளார். 
 
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது.   
 
அதோடு, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது, அதேபோல கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 
குறிப்பாக தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொரோனா குறித்து பேசுகையில், புயல் ஏற்பட்டால் மரங்கள் சாய்வது போல பிரச்னை ஏற்பட்டால் பாதிப்பு வரத்தான் செய்யும். எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமை உள்ளது என்பதை போல இந்திய மக்கள் கொரோனாவை எதிர்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments