Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலை விரட்டிய ஆன்மீக அரசியல்; ரஜினியுடன் கூட்டணியா? – சூசகம் சொல்லும் ராஜேந்திர பாலாஜி!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (11:01 IST)
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கும் முன்னரே ரஜினி கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கும் என்பது தொடர்பான யூகங்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜேந்திர பாலாஜி “முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும், நிர்வாகிகளை நியமிக்கட்டும். ஜனவரி, பிப்ரவரி காலகட்டத்தில் மாற்றங்கள் நிகழலாம். கூட்டணியும் அமையலாம்” என கூறியுள்ளார்.

மேலும் தமிழகம் நோக்கி வந்த இரு புயல்களும் வலுவிழந்ததற்கு தமிழகத்தில் நடைபெறும் ஆன்மீக அரசியலே காரணம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments