Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு பாதுகாவலர் எடப்பாடி பழனிச்சாமி – ராஜேந்திர பாலாஜி புகழ்ச்சி !

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (09:14 IST)
சட்டமன்றத்தில் பட்டாசு தொழிலாளர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

நேற்று சட்டமன்றத்தில் சிறு மற்றும் குறு தொழில்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பட்டாசு தொழிலாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் உச்சநீதிமன்றத்தில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாட ஏற்பாடு செய்தார். மேலும் இதுபற்றி விவாதிக்க 10 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்ப்புகளையும் வரவைத்தார்’ எனக் கூறினார்.

‘ஆகையால்  நம்மை விட முதல்வருக்கு பட்டாசு தொழிலாளர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் பட்டாசு காவலன் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments