Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணிக்குள் எத்தனை மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

Siva
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (07:30 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருக்கும் நிலையில், நாளையும் மறுநாளும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments