Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14ம் தேதி வரை மழைவாய்ப்பு! இன்று 6 மாவட்டங்களில் கனமழை? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:36 IST)

தமிழகத்தின் பல பகுதிகளில் வருகிற 14ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை, இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிறது 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

11 மற்றும் 12ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

அடுத்த கட்டுரையில்
Show comments