அடுத்த ஒரு மணி நேரம் நீடிக்கும் கனமழை

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (10:43 IST)
சென்னையில் பெய்து வரும் கனமழை அடுத்த ஒரு மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 

 
வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. 
 
மமயிலாப்பூர், வளசரவாக்கம், போருர், ராமாபுரம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு மணி நேரம் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் கொஞ்சம் இறங்கினால் 1 லட்சத்திற்கு கீழே வந்துவிடும் ஒரு சவரன் தங்கம்.. தொடர் சரிவு..!

எனக்கு சீட் கொடுக்காமல் என் மகனுக்கு சீட் கொடுப்பதா? தந்தை பொங்கியதால் திமுக எடுத்த அதிரடி முடிவு..!

பால்டாயில் குடிச்சதெல்லாம் பன்ச் வசனம் பேசுது!.. உதயநிதியை பங்கம் பண்ணிய பழனிச்சாமி...

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா? ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை

துணிக்கடைக்கு நடிகை வந்தா கூட்டம் கூடும்.. ஆனா துணி எடுக்க மாட்டாங்க!.. விஜயை நக்கலடித்த பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments