Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை நிவாரண உதவிகள் : தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

Webdunia
புதன், 18 நவம்பர் 2015 (00:24 IST)
மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 

 
கடலூரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கனமழை பெய்துள்ளது. மக்கள் மிகவும் அவஸ்தைபட்டுள்ளனர். இருப்பினும், மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக  உள்ளது.
 
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் போர்க்கால அடிப்படையில் உதவிகள் இன்னும் விரைந்து செய்லபடுத்த வேண்டும். மேலும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து, சென்னை மற்றும் கடலூருக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.
 
மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு மோசமாக செயல்படுவதாக திமுக, பாமக, தேமுதிக போன்ற பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments