Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் தீவிரமடையும் பருவமழை – அலர்ட் ரிப்போர்ட் !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:11 IST)
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று முதல் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு :-
தென்மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா பக்கம் சென்று வலுவிழந்த நிலையில், அரபிக் கடலில் புதிய புயல் உருவாகியது.தற்போது வங்கக் கடலில், தென்மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை தீவிரமடையும்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :-
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த இரண்டு தினங்களுக்கு தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மணப்பாறை பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மணப்பாறை பகுதியில் நிலவி வரும் வானிலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, அங்குள்ள மீட்புப் படையினருக்குத் தெரிவித்து வருகிறோம். மன்னார் வளைகுடா, தென்தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments