Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:34 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.  

மேலும் அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் மத்திய அரபிக் கடலின் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments