Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Siva
வியாழன், 19 செப்டம்பர் 2024 (08:15 IST)
தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக பகலில் அதிக வெப்பநிலை இருப்பதால் பொதுமக்கள் அவதியில் இருக்கும் நிலையில், மாலை மற்றும் இரவில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வது பொதுமக்களுக்கு நிம்மதியை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், காற்றின் வேக திசை மாறுபாடு காரணமாக இன்று காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும், இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

சென்னையில் இன்று மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்குமா என்ற அச்சமும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தம்பி மேல இருக்க அன்பு வேற.. அரசியல் வேற..! - விஜய் குறித்து சீமான் பேச்சு!

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னொரு மருத்துவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி தகவல்..!

சொர்க்கத்தில் இருந்து இந்திரா காந்தி வந்தாலும் காஷ்மீருக்கு 370வது பிரிவு கிடைக்காது: அமித்ஷா

2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை! ரசீதும் கிடைக்கும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments