Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது? தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்.!

Siva
வியாழன், 25 ஜூலை 2024 (07:53 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லை என்று பயணிகள் குற்றம் காட்டி வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டும் போதே, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றும் இந்த இரண்டும் இருந்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் எளிதாக சென்று வருவார்கள் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் குறித்த பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்என் சிங் அவர்கள் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும் என்றும் பேருந்து நிலையத்தை ஒட்டியே ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு முடித்ததும் ரயில்வே நிலையம் கட்டும் பணி தொடங்கும் என்றும் கண்டிப்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments