Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார் வேண்டாம் ராகுல் என அழையுங்கள் – மாணவிகளோடு ராகுல் காந்தி கலந்துரையாடல் !

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (12:09 IST)
தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கல்லூரி மாணவிகளிடம் உரையாடி வருகிறார்.

இன்று தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் இன்று மாலைக் கலந்துகொள்ளும் அவர் அதற்கு முன்பாக சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில் இப்போது கலந்துகொண்டு பேசிவருகிறார்.

இந்தக் கலந்துரையாடலில் மாணவிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து வரும் ராகுல் தன்னிடம் எளிமையானக் கேள்விகளைக் கேட்காமல் கடினமானக் கேள்விகளைக் கேட்குமாறும் அப்போதுதான் தான் மனதில் உள்ளதைப் பேசமுடியும் என்று கூறியுள்ளார். மேலும் அவரை சார் என அழைத்த ஒருப் பெண்ணை ‘தன்னை சார் என அழைக்க வேண்டாம் எனவும் ராகுல் என்றே அழைக்கலாம்’ எனவும் உற்சாகமாகக் கூறியுள்ளார்.

முன்னதாக அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோபேக் ராகுல் மற்றும் கோபேக் பப்பு ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரண்ட் ஆக ஆரம்பித்துள்ளன. ஆனால் இந்த டிவிட்களில் பெரும்பாலானவை வட இந்திய மாநிலங்களில் இருந்து பதியப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ராகுலுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments