Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முறையாக ராஜீவ் நினைவிடத்திற்குச் செல்லும் ராகுல் காந்தி!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (15:15 IST)
ராகுல் காந்தி முதன்முறையாக நாளை  தன் தந்தையின் நினைவிடத்திற்குச் செல்லலவுள்ளார்.

 
'இந்திய காங்கிரஸ் பாரத  ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில்  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இந்து காஷ்மீர் வரை யாத்திரை நாளை தொடங்கப்படவுள்ளது.

நடைபயண யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,570 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளது.

இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் 118 காங்கிரஸ் உறுப்பினர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். இந்த 118 பேரும் தங்குவதற்கு சகல வசதிகளுடன் 60 கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி மற்றும் 118 பேருக்கு பாதுகாப்பாக பாதுகாப்பு குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாத்ரீகர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ குழுவும் தயாராக உள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், பின்னர் மாலை 3.30 தொடங்கி இரவு 7 மணி வரையிலும் நடைபயணம் மேற்கொள்ளப்படும். ஒரு நாளைக்கு 22 முதல் 26 கிலோமீட்டர் வரை பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடை பயணம் செல்லும் மாநிலங்களில் மக்களை சந்தித்து கலந்துரையாடவும், கலை நிகழ்ச்சிகளுக்கும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்த நிலையில்,  நாளை  காலை 6:45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்திற்கு முதன் முறையாக  ராகுல் செல்கிறார்.  அங்கு தன் தந்தையின் நினைவிடத்தில் மரியாதை  செலுத்துகிறார் என்ற தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments