Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இருந்தால் தமிழனாகிவிட முடியுமா? - ரஜினியை விளாசிய ராதாரவி

Webdunia
திங்கள், 22 மே 2017 (15:38 IST)
தமிழ்நாட்டில் வசிப்பதால் மட்டும், நடிகர் ரஜினிகாந்த் தமிழனாகிவிட முடியாது என நடிகர் ராதாரவி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.


 

 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிப்பதுதான் தற்போது ஹாட் நியூஸ். சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், ரஜினியின் நீண்ட நாள் நண்பரான நடிகர் ராதாரவியிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராதாரவி “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி உறுதியான முடிவெடுக்க வேண்டும். அவர் நல்லவர். அவரை பத்திரிக்கைகள் சீண்டி கொண்டிருக்கின்றன. அவருக்கென ரசிகர் கூட்டம் இருக்கிறது. விஜயகாந்த் போல் அவரும் அரசியலில் இறங்கட்டும். அதை நான் வரவேற்கிறேன். 
 
44 வருடங்கள் தமிழ்நாட்டில்தான் வசித்து வருகிறேன். நான் ஒரு பச்சைத் தமிழன் என்கிறார் ரஜினி. வெள்ளைக்காரன் கூட 200 வருடங்கள் இந்தியாவில் இருந்தார்கள். அதற்காக அவர்களை இந்தியர்கள் என சொல்ல முடியுமா?. ரஜினி ஏன் பயப்பட வேண்டும்? நான் தெலுங்கன்தான் என தைரியமா சொல்வேன். அவர் தன்னை பச்சைத் தமிழன் என கூறுவதால்தான் அவரை எல்லோரும் விமர்சிக்கிறார்கள்” என அவர் கூறினார்.

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments