ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு..!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (11:42 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஒரே அணியாக போட்டியிடும் நிலையில் அக்கட்சிக்கு மேலும் ஒரு கூட்டணி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால் தற்போது ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்று விட்ட நிலையில் ஒரே அணியாக போட்டியிடுகிறது என்பதும் இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு பிரச்சனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே அதிமுகவுக்கு ஒரு சில கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய நீதி கட்சி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தரும் அதிமுக வேட்பாளருக்கு புதிய நீதி கட்சி முழு ஆதரவு தந்து அக்கட்சியின் வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய முழுமையாக ஒத்துழைக்கும்’ என அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments